தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தொடர் போராட்டம் - தமிழ அரசுக்கு சாலை பணியாளர்கள் எச்சரிக்கை! - தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை

சாலைப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தொடர் போராட்டங்கள் நடத்த உள்ளதாக தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கத்தினர் தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளனர்

Road Workers Union announced that the demands are not met decided to continue strike
கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக சாலை பணியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது

By

Published : Mar 23, 2023, 9:17 AM IST

Updated : Mar 23, 2023, 10:02 AM IST

கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக சாலை பணியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது

கரூர்: தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் கரூரில் நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்திற்கு பிறகு ஈடிவி பாரத் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "தமிழகத்தில் நெடுஞ்சாலைத் துறையில் பணியாற்றும் சாலைப் பணியாளர்கள் வாழ்வாதார கோரிக்கையான 41 மாத பணி நீக்க காலத்தை பணிக் காலமாக அறிவிக்க வேண்டும். சாலை பணியாளர்களுக்கு அன் ஸ்கில்டு எம்ப்ளாயி (Unskiled Employee) என்பதை நிறுத்தி வைத்துள்ளதை மாற்றி, அன் ஸ்கில்டு எம்ப்ளாயி என்று அறிவித்து ஊதியத்தை மாற்றி அறிவிக்க வேண்டும்.

அதிமுக ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலை பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட போது, பணி நீக்க காலத்தில் உயிர் நீத்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசு காலதாமதப்படுத்தி வருகிறது. உடனடியாக பணி நீக்க காலத்தில் உயிர் நீத்த சாலை பணியாளர்களின் வாரிசுகளுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு வழங்கிட வேண்டும் என்பது குறித்த பல்வேறு கருத்துகளை மாநில செயற் குழு கரூரில் கூடி விவாதித்து உள்ளது.

சாலைப் பணியாளர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஏப்ரல் 4-ஆம் தேதி தமிழகம் முழுவதும் கோட்ட, உட்கோட்ட அளவில் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டு உள்ளது. சாலைப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வாய்ப்பு இல்லை என்ற தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சர், ஐஏஎஸ் அதிகாரிகள் கருத்து ஏற்புடையதாக இல்லை. எனவே தொடர்ந்து தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் போராட்டத்தை முன்னெடுப்பது என கரூர் மாநில செயற்குழு கூட்டம் தீர்மானித்துள்ளது.

மேலும் மார்ச் 24ஆம் தேதி நடைபெற உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தும் ஜாக்டோ ஜியோ மனித சங்கிலி போராட்டத்தில் சாலைப் பணியாளர்கள் ஆதரவளித்து பங்கேற்பது, மார்ச் 28ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டு உள்ளன.

சாலைப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அடுத்த மாதம் ஏப்ரல் 19-ஆம் தேதி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் நடத்தும் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கோட்டை நோக்கி தமிழக முதலமைச்சரை சந்தித்து மனு அளிக்கும் போராட்டத்தில் சாலைப் பணியாளர்கள் 10,000 பேர் ஈடுபட உள்ளனர்.

சாலை பணியாளர்களை அரசு அழைத்துப் பேசி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். எதிர்வரும் செப்டம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் தாராபுரத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் சங்கத்தின் 8வது மாநில மாநாடு நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.

செய்தியாளர் சந்திப்பின் போது, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் அம்சராஜ், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கரூர் மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், பொருளாளர் பொன் ஜெயராம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: "காஞ்சிபுரம் பட்டாசு ஆலை விபத்து கற்றுக் கொடுத்த பாடம்" - அமைச்சர் கூறுவது என்ன?

Last Updated : Mar 23, 2023, 10:02 AM IST

ABOUT THE AUTHOR

...view details