தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் 10 அம்ச கோரிக்கைகளை ஏற்க வலியுறுத்தி 7ஆவது நாள் போராட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மத்திய செயற்குழு உறுப்பினர் சந்துரு தலைமையில் நடைபெற்றது.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 7 வருவாய் வட்டத்தில் பணியாற்றும் 210 வருவாய்த் துறை பணியாளர்கள் கடந்த 17ஆம் தேதி முதல் இன்று வரை ஏழாவது நாளாக பணியை புறக்கணித்து, காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.