தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரூரில் போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் போராட்டம்! - தமிழ்நாடு தற்போதைய செய்திகள்

கரூர்: போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் கடந்த 63 மாதம் பஞ்சப்படி (DA) வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.

போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் போராட்டம்
போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் போராட்டம்

By

Published : Feb 16, 2021, 6:12 PM IST

கரூர் மாவட்ட வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் கடந்த 63 மாதம் பஞ்சப்படி (DA) வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இதற்கு அதன் மாநிலத் தலைவர் எஸ்.கிருஷ்ணன் தலைமை தாங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "கடந்த 63 மாதங்களாக ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பஞ்சப்படியை வழங்காமல் அரசு புறக்கணித்து வருகிறது.

போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் போராட்டம்

போக்குவரத்து துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு மருத்துவக் காப்பீடு, குடும்ப ஓய்வூதிய நிலுவைத் தொகை முழுவதையும் வழங்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை, கோவை உள்ளிட்ட 6 போக்குவரத்து கழகங்களை சேர்ந்த ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் இங்கு திரண்டு உள்ளோம். எங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் விரைவில் சென்னை தலைநகரில் மாபெரும் போராட்டத்தை நடத்துவோம்" என்றார்.

இதையும் படிங்க: சிலிண்டரை தலையில் சுமந்து ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

ABOUT THE AUTHOR

...view details