தேசிய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் 27ஆவது தமிழ் மாநில மாநாடு கரூர் நாரதகான சபா அரங்கில் இன்று (ஏப்ரல்.10) தொடங்கி இரண்டு நாள்கள் நடைபெறுகிறது.
இது குறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திடம் தேசிய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் என்.நிஜார் முஜாபர் கூறியதாவது, "தமிழ்நாட்டில் 400-க்கும் அதிகமான அஞ்சல்காரர், எம்டிஎஸ் (Multi Task Service) பணியிடங்கள் நிரப்படமால் உள்ளன. காலியாக உள்ள அந்த அஞ்சல் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
தேசிய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் என்.நிஜார் முஜாபர் அஞ்சல்கள் பிரிப்பை ஒரே இடத்தில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனை கைவிடவேண்டும். மத்திய நிதி அமைச்சர் உடனடியாக கரோனா தொற்று காலத்திலும் பணிபுரிந்து வரும் அஞ்சல் ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள பஞ்சப்படி உயர்வுகளை வழங்க வேண்டும்" எனக் கோரிக்கை வைத்தார்.
இம்மாநாட்டில் அஞ்சலக சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை ரூ.50 என்பதை ரூ.500ஆக உயர்த்தியதை ரூ.100 ஆக குறைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதையும் படிங்க: பழைய பல்லாவரம் அஞ்சலகப் பகுதிகள் மறுசீரமைப்பு!