கரூர் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் மாவட்ட வருவாய் அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. புகைப்படத்துடன் கூடிய அப்பட்டியலை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் வெளியிட்டார். இதில் அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். மாவட்டத்தில் மொத்தம் அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம் (தனி), குளித்தலை உள்ளிட்ட 4 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன.
கரூரில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு - கரூரில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
கரூர் மாவட்டத்தில் புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட வருவாய் அலுவலர் அனைத்து கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் வெளியிட்டார்.

karur
வாக்காளர் பட்டியல் வெளியீடு
அதில் 4 லட்சத்து 27 ஆயிரத்து 129 ஆண் வாக்காளர்கள், 4 லட்சத்து 54 ஆயிரத்து 415 பெண் வாக்களர்கள், 67 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 8 லட்சத்து 81 ஆயிரத்து 611 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் அதில் 19 ஆயிரத்து 376 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டும், ஆயிரத்து 630 வாக்காளர்கள் நீக்கப்பட்டும் உள்ளனர்.
இதையும் படிங்க:ராமநாதபுரத்தின் 4 சட்டப்பேரவை தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!