கரூர்:தோகைமலை அருகே உள்ள நல்லூர் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்தத் தகவலையடுத்து காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின்பேரில் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையினர் நல்லூர் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது நல்லூர்-கலிங்கப்பட்டி பிரதான சாலையில் சென்றுகொண்டிருந்த ஈச்சர் லாரியைக் காவல் துறையினர் தடுத்து நிறுத்தி ஓட்டுநரிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் ஓட்டுநர் முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்துள்ளார்.
இதில் சந்தேகமடைந்த காவல் துறையினர் லாரியைச் சோதனை செய்தனர். இதில், தமிழ்நாடு அரசால் மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் ரேஷன் அரிசி ஐந்து டன் இருந்ததைக் காவல் துறையினர் கண்டறிந்தனர்.