ஆகஸ்ட் 15ஆம் தேதி நாடு முழுவதும் ரக்ஷா பந்தன் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை சகோதர, சகோதரிகளுக்கிடையான உறவை பலப்படுத்தும் விதமாக பார்க்கப்படுகிறது. வட இந்திய மக்கள் ரக்ஷா பந்தனை ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் ஷ்ரவன் மாதத்தில் பெளர்ணமி நாளில் கொண்டாடி மகிழ்கின்றனர். இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் உள்ள பரணி பார்க் வித்யாலயா பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் ரக்ஷா பந்தனை முன்னிட்டு ராக்கிகளை தயார் செய்தனர்.
ராணுவ வீரர்களுக்கு ராக்கிகளை வழங்கிய பள்ளி மாணவ, மாணவிகள் - பள்ளி மாணவ மாணவிகள்
கரூர்: பரணி பார்க் வித்யாலயா பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளே தயார் செய்த ராக்கிகள் இந்திய ராணுவ வீரர்களுக்கு அனுப்பப்பட்டன.
மாணவர்கள்
மாணவர்கள் தயாரித்த ராக்கிகள் ராணுவ வீரர்களுக்கு உத்தரகாண்ட் மாநிலத்தின் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜயிடம் பள்ளி நிர்வாகம் வழங்கியது. இந்த நிகழ்வில் அம்மாவட்ட ஆட்சியர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களிடம் உரையாற்றினார். இதில் மாணவர்களின் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.