கரூர் மாவட்டத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, கட்சி உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த திருநாவுக்கரசர், டெல்லியில் பாஜகவினர் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்ட டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி திடீர் இடமாற்றம் செய்யப்பட்ட சம்பவம், நீதி துறையிலும் மத்திய அரசு தலையிட்டு குழப்பங்களையும், அநீதியையும் ஏற்படுத்திவருகிறது என்பதற்கு ஒரு உதாரணம் என குற்றஞ்சாட்டினார்.
ரஜினிகாந்த் மத்திய அரசை கண்டித்திருப்பது வரவேற்கத்தக்கது - திருநாவுக்கரசர் இன்றைய சூழலில் மத்திய அரசை அனைவரும் கண்டிக்கும் நிலையில் உள்ளனர். நிலையை புரிந்து கொண்டு நடிகர் ரஜினிகாந்த் மத்திய அரசை கண்டித்திருப்பது வரவேற்கதக்கது. ஆட்சியை கலைத்து விடுவார்களோ அல்லது கட்சியை உடைத்து விடுவார்களோ என்ற அச்சத்தில் அதிமுக அரசு மத்திய பாஜக அரசுக்கு அடிமையாக உள்ளது. இதுவே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் கண்டிப்பாக இதற்கு ஒத்துழைத்திருக்க மாட்டார் எனத் தெரிவித்தார்.
இதையும் டிங்க:'திமுகவும் காங்கிரசும் பிணந்தின்னி அரசியல் செய்கிறது...!’