குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கரூர் கடைவீதி முன்பு காங்கிரஸ், திமுக கூட்டணி கட்சி சார்பில் நடைபெற்ற எட்டாம் நாள் கையெழுத்து இயக்க போராட்டத்தில் பங்கேற்ற, எம்.பி. ஜோதிமணி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய எம்.பி. ஜோதிமணி, “ரஜினிகாந்த் பாஜகவின் குரலாக செயல்படுகிறார். அதில் சந்தேகமே இல்லை, எப்பொழுதெல்லாம் பாஜக அரசுக்கு நெருக்கடி ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் தமிழ்நாட்டிலிருந்து ரஜினி பேசுகிறார். மக்கள் பிரச்னை வரும்பொழுது விலகிக் கொள்கிறார். கேட்டால் நான் நடிகர் மட்டும்தான் என்கிறார்.
தற்போது குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக ரஜினி குரல் கொடுத்திருப்பது தமிழ்நாடு மக்களுக்கு துரோகம் இழைக்கும் செயலாகும். தமிழ்நாட்டில் நீடிக்கும் வேலையில்லாத் திண்டாட்டம் காரணமாக துப்புரவு பணியாளர் தேர்வுக்கு பி.டெக், எம்.டெக் உள்ளிட்ட பட்டதாரிகள் 14 லட்சம் பேர் விண்ணபித்துள்ள அவலம் தமிழ்நாட்டில் நடைபெறுகிறது.
'ரஜினிகாந்த் ஒரு பிஜேபிகாரர்; பாவம் அது அவரை தவிர அனைவருக்கும் தெரியும்' ரஜினி நடித்த ஒரு படத்தில், ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு கொடுத்தது தமிழல்லவா” என பாடல் வரும். ஆனால் அவர் அதை நன்றியோடு எண்ணிப் பார்க்காமல் தமிழ் மக்களுக்கு எதிராக பாஜகவின் குரலாக செயல்படுகிறார். மேலும் தமிழ் மக்களுக்கு துரோகம் இழைக்கும் போக்கை ரஜினிகாந்த் கைவிட வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய இயக்கம் பேரணி