தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் மழை வேண்டி கோயில்களில் யாகம் நடத்த அதிமுக மாவட்ட செயலாளர்களுக்கு தலைமைக் கழகம் அறிவுறுத்தியது.
மழைக்காக அமைச்சரின் குபீர் செயல்! - rain-prayer-transport-minister
கரூர்: மழை வேண்டி பசுபதீஸ்வரர் கோவிலில் தமிழ்நாடு போக்குவரத்துதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் யாகம் நடைபெற்றது.
இதனையடுத்து கரூர் மாவட்ட கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் போக்குவரத்துதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் மழை வேண்டி யாகத்தில் ஈடுபட்டார். இந்த யாகத்தில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதேபோல் பல்வேறு மாவட்டங்களிலும் முக்கிய அமைச்சர்கள் யாகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தண்ணீர் சேமிப்பிற்கு ஏரிகளை தூர்வாருதல், மரம் நடுதல், நீர் சேமிப்பு திட்டங்களுக்கு முக்கியத்துவமளித்தல் உள்ளிட்டவற்றில் ஆர்வம் காட்டாமால், தமிழ்நாடு அமைச்சர்கள் புரோகிதர்களைப்போல் கோயில்களில் யாகம் நடத்தும் செயல் பொதுமக்களிடையே கிண்டலுக்கும், கேலிக்கும் உள்ளாகியுள்ளது.