கரூர் அருகே உள்ள மண்மங்கலம் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த நாகராஜின் மகன் சுபாஷ் (25), தனியார் பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராகப் பணியாற்றினார். இவர் சர்மிளா (25) என்பவரைக் காதலித்து, கடந்த 50 நாள்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். இருவரும், சுபாஷின் வீட்டில் தங்கி குடும்பம் நடத்திவந்தனர்.
இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்று விட்டுவருவதாகக் கூறி, சர்மிளா கிளம்பினார். பின்னர் தாய் வீட்டிற்குச் சென்ற அவர், மீண்டும் வீட்டிற்குத் திரும்பி வரவில்லை.
சுபாஷ் வீட்டிற்கு வரச் சொல்லி அழைத்தும், சர்மிளா வரவில்லையாம். இதனால் மனமுடைந்த சுபாஷ், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார்.