கரூர்:நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் குச்சிச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விவேக்(33). இவர் வேலாயுதம்பாளையம் அருகே உள்ள புகலூர் பகுதியில் செயல்பட்டு வரும் டிஎன்பிஎல்(TNPL) காகித ஆலையில் பணியாற்றி வருகிறார். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 32 வயது பெண், ஏற்கனவே திருமணம் ஆகி கணவனை பிரிந்து வாழ்ந்த நிலையில், இருவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமாகி அந்த பெண் விவேக்கை மறுமணம் செய்து கொண்டுள்ளார்.
இந்நிலையில், இருவரும் கரூர் வேலாயுதம்பாளையம் புகலூர் பகுதியில் வசித்து வந்துள்ளனர். சமீபத்தில் விவேக் தனது பெற்றோர் வற்புறுத்தலால் பெண்ணை பிரிந்து, வேறொரு திருமணம் செய்வதற்கான ஏற்பாட்டை செய்து வருவதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில், திருமணத்தை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், தனது வயிற்றில் விவேக்கின் குழந்தையை சுமந்து வருவதாக கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று (செப்.13) பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளதார்.
புகார் அளித்த பெண் ஈடிவி பாரத்திற்கு அளித்த பேட்டியில், "தனக்குத் திருமணம் ஆகி 3 நாட்களில் கணவனை பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்த நிலையில் கடந்த 2019ம் ஆண்டு கரோனா ஊரடங்கு நேரத்தில் இன்ஸ்டாகிராமில் கரூர் வேலாயுதம்பாளையம் அருகே உள்ள டிஎன்பிஎல் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் விவேக் உடன் தொடர்பு எற்பட்டது
விவேகின் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டோம். திருமணத்திற்கு தனது பெற்றோர் ஏற்றுக் கொள்ளாதலால் விவேக்கை நம்பி கரூர் வேலாயுதம்பாளையத்தில் வாடகைக்கு வீடு எடுத்து ஒன்றாக வசித்து வந்ததோம். தனது கணவரின் தங்கை திருமணத்திற்கு பிறகு விவேக் தனது பெற்றோரிடம் கூறி அழைத்துச் செல்வதாக கூறி வந்தார்.