கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனுக்கு ஆதரவாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பரப்புரை மேற்கொண்டார்.
‘டிடிவி தினகரன் தான் உண்மையான ஸ்லீப்பர் செல்’ - பிரேமலதா விஜயகாந்த் - விஜயகாந்த்
கரூர்: அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தான் உண்மையான ஸ்லீப்பர் செல் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
அப்போது அவர் பொதுமக்களிடம் பேசுகையில், “இங்கு நிற்கும் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி குறித்து நான் அதிகம் பேசத் தேவையில்லை. ஏனென்றால் எல்லாவற்றிற்கும் அவர் சென்று வந்தவர்.
டிடிவி தினகரன் அவ்வப்போது ஸ்லீப்பர் செல், ஸ்லீப்பர் செல் என்று கூறி வருகிறார். தினகரன் தான் உண்மையான ஸ்லீப்பர் செல். திமுக தலைவர் ஸ்டாலின் நாணயத்தின் இரு பக்கம் போல நடிக்கிறார். பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி என்று கூறிவிட்டு சந்திரசேகர ராவ், துரைமுருகன் மூலம் சந்திரபாபு நாயுடு ஆகியோரை சந்தித்து மூன்றாவது அணியை அமைக்க ரகசியமாக முற்படுகிறார். ஸ்டாலினுக்கு தில் இருந்தால் சந்திரசேகர ராவை சந்தித்தது தொடர்பாக வெள்ளை அறிக்கை விட தயாரா?” என்று கேள்வி எழுப்பினார்.