கரூர்: தாந்தோன்றிமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று மாலை திடீர் மழை பெய்தது. இதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் பேருந்து நிறுத்தம் அமைந்துள்ள பகுதியில் மின்கம்பி திடீரென அறுந்து விழுந்தது.
கரூரில் திடீர் மழை : அறுந்து விழுந்த மின்கம்பி - அறுந்து விழுந்த மின்கம்பி அகற்றம்
கரூரில் பெய்த திடீர் மழையால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மின்கம்பி அறுந்து விழுந்தது. உடனடியாக மின்கம்பி அகற்றப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதுதொடர்பாக பாதுகாப்பு பணியில் இருந்த போக்குவரத்து காவலர்கள், மற்றும் தான்தோன்றிமலை காவல்துறையினர் மின்வாரியத்திற்கு தகவல் அளித்தனர். அதன் அடிப்படையில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு அறுந்து விழுந்த கம்பி அகற்றப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்கம்பத்தில் பறவை ஒன்று அமர்ந்தபோது, எதிர்பாராதவிதமாக மின் பாதையில் கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசியதால் மின் கம்பி அறுந்து விழுந்ததாக தாந்தோன்றிமலை துணை மின் நிலைய மின்வாரிய அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: Leopards Spotted At Residential Areas In Coimbatore: நாய்களை வேட்டையாடி வரும் சிறுத்தையைப் பிடிக்க மேலும் ஒரு கூண்டு