தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் களைகட்டிய சமத்துவ பொங்கல் விழா! - கரூர் செய்திகள்

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பிரபுசங்கர் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

விழாக்கோலம் பூண்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
விழாக்கோலம் பூண்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

By

Published : Jan 13, 2023, 8:46 AM IST

விழாக்கோலம் பூண்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

கரூர்: ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (12.01.2023) தமிழர் திருநாளான பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் சமத்துவ பொங்கல் வைத்து, அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிகளை ஆட்சியர் த.பிரபுசங்கர் துவங்கி வைத்து கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் அனைவரும் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையும் பெண்கள் பட்டுசேலையும் அணிந்து கலந்து கொண்டனர்.

இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்டம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் 17 பானைகளில் சிறு தானியம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொங்கல் வைத்தனர். பொங்கல் பானைகளில் தமிழர்களின் மரபுப்படி மஞ்சள் கொத்து கட்டி அருகே செங்கரும்பு வைத்து பொங்கல் வைக்கப்பட்டது.

மேலும் பாரம்பரிய வாகனமாக கருதப்படும் மாட்டு வண்டி ஏர் கலப்பை வைக்கப்பட்டு மானாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட கங்கை குயில்களின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. அரசு அலுவலர்களுக்கு கோலப்போட்டி (பெண்களுக்கு மட்டும்), கயிறு இழுத்தல், லக்கி கார்னர், பானை உடைத்தல், லெமன் இன் ஸ்பூன், உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு போட்டியில் வெற்றி பெற்ற அலுவலர்களுக்கும், கோலப் போட்டியில் பரிசு பெற்றவர்களுக்கும், சிறந்த பொங்கல் வைத்தவர்களுக்கு என போட்டிகளில் முதல் இரண்டு இடம் பிடித்தவர்களுக்கு பொங்கல் வைப்பதற்கான மண்பானைகளை பரிசுகளாக வழங்கப்பட்டது.

இந்த பாரம்பரிய விழாவினை மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சைபுதீன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சச்சிதானந்தம், மாவட்ட விளையாட்டு அலுவலர் கோகிலா, மாவட்ட சுற்றுலா அலுவலர் காமில் அன்சாரி ஆகியோர் வெவ்வேறு அணிகளாகப் பிரிந்து மாவட்ட முழுவதும் அரசு அலுவலகத்தில் பணிபுரியும் வெவ்வேறு துறைகள் சார்ந்த ஊழியர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் கலை நிகழ்ச்சிகளை நடத்தி உற்சாகப்படுத்தினர்.

இந்த விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் (நிலமெடுப்பு) கவிதா, திட்ட இயக்குநர் வாணி ஈஸ்வரி, மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) தண்டாயுதபாணி, உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழா மற்றும் கலை நிகழ்ச்சிகளால் விழாக்கோலம் பூண்டது. இந்த சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளித்ததாக அனைத்து துறை சார்ந்த அரசு ஊழியர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: கட்டபொம்மன் பிறந்த நாள் விழா; கரூரில் எஸ்ஐ கையை முறுக்கிய இளைஞர்கள்... கடுப்பில் நடந்த தடியடி

ABOUT THE AUTHOR

...view details