கரூர் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக தொடரும் கன மழையால் ஆங்காங்கே, சின்னஞ்சிறு குட்டை, குளங்கள் நிரம்பியுள்ளதோடு, கடவூர் வட்டம், மைலம்பட்டி பகுதியில் உள்ள குளங்களும், சிறு ஒடைகளும் நிரம்பி வழிகிறது.
கரூரில் இருந்து புலியூர் வழியாக தரகம்பட்டி செல்லும் சாலைகளில் மழைநீர் வெள்ளமாக பாய்ந்தோடுகிறது. மேலும், ஆங்காங்கே, சாலைகளில் ஓடும் மழைநீரில் கார்கள் மற்றும் பேருந்துகள் ,இருசக்கர வாகனங்கள் சாலைகளில் செல்பவர்களின் மீது தண்ணீரை வாரி இறைத்து செல்கின்றன.