மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 18ஆம் தேதி நடக்கிறது. இந்த தேர்தல்களில் நூறு விழுக்காடு வாக்குப்பதிவு மற்றும் வாக்குச்சாவடி மையங்களில் பாதுகாப்பை வலியுறுத்தி கரூரில் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு இன்று நடைபெற்றது.
கரூரில் தேர்தல் பணி ராணுவ வீரர்கள் அணிவகுப்பு
கரூர்: மக்களவைத் தேர்தலில் நூறு விழுக்காடு வாக்குப்பதிவு மற்றும் வாக்குச்சாவடி மையங்களில் பாதுகாப்பை வலியுறுத்தி கரூரில் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு இன்று நடைபெற்றது.
கரூரில் தேர்தல் பணி ராணுவ வீரர்கள் அணிவகுப்பு
இதனை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான மான.அன்பழகன் கொடியசைத்து தொடக்கி வைத்தார். பேருந்து நிலையம் அருகில் இருக்கக்கூடிய ரவுண்டானா பகுதியில் தொடங்கிய இந்த அணிவகுப்பு, நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. இதில், மாவட்ட கண்காணிப்பாளர் ராஜசேகரன், இந்தோ திபெத் பார்டர் போலீஸ் கம்பெனி-1, தமிழ்நாடு சிறப்பு காவல் படை கம்பெனி-2, கரூர் ஆயுதப்படை காவலர்கள், கரூர் உட்கோட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.