கரூர்: ராமானுஜம் நகரிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பெண்கள் இன்று (மே 12) காலை வீட்டு வாசலில் கோலம் போட்டுக்கொண்டிருந்தனர். அதே சமயம் அப்பகுதியைச் சேர்ந்த மூன்று பெண்கள் ஒன்று சேர்ந்த நடைபயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இருவர், பெண்களை பின் தொடர்ந்து வந்தனர். அவர்களில் ஒருவர் பெண்களின் பின்னால் ஓடிவந்து பெண் ஒருவரின் செயினை பறித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பிச் சென்றனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் செந்தூர்பாண்டியன் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டு, அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார்.
பின்னர், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். அதிகாலை நேரத்தில் நடைபயிற்சி மேற்கொள்ளும் பெண்களை குறிவைத்து செயின் பறித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:இலவசமாக பொருட்கள் கேட்கும் கஞ்சா ஆசாமிகள் - கடைக்காரரை மிரட்டும் வீடியோ