கரூர் மாவட்டத்தில் பொதுமக்கள் அச்சத்தினை போக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் உத்தரவின்பேரில், கரூர் மனோகரா கார்னர் பகுதியில் தொடங்கி ஜவகர் பஜார், மேற்கு பிரதட்சணம் சாலை, கோவை சாலை உள்ளிட்ட பகுதிகளில் கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர்.
முன்னதாக கரூர் மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் கொடியசைத்து தொடங்கிவைத்தார். 200-க்கும் மேற்பட்ட காவல் துறையினர், வஜ்ரா வாகனங்களுடன் கொடி அணிவகுப்பு ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
கரூர் மாவட்டத்தில் வரும் நவம்பர் 24ஆம் தேதி பாஜகவின் வேல் யாத்திரை பாஜக முக்கியத் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் கரூர் மாவட்ட திமுக சார்பில் கோ பேக் மோடி (Go Back Modi) என்னும் சுவர் விளம்பரங்கள் பல இடங்களில் வரையப்பட்டு உள்ளது.
திமுக-பாஜக இடையே பக்... பக்...! கரூரில் காவலர் கொடி அணிவகுப்பு! - Vel Yaththirai
கரூர்: கரூர் மாவட்ட காவல் துறை சார்பில் நகர் பகுதியில் காவலர் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட காவலர்கள் கலந்துகொண்டனர்.
காவல்துறை
அதனை திமுகவினர் அழிக்காவிட்டால் பாஜகவினர் களத்தில் இறங்கி அழிப்பார்கள் என அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ள சூழ்நிலையில் காவல் துறையினரின் இந்த அணிவகுப்பு ஊர்வலம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.