கரூர்:திருப்பூர் மாவட்டம், உடுமலை அமராவதி அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டுள்ளதால் செட்டிபாளையம் அணையில் அமைந்துள்ள பூங்காவை இன்று (ஜூலை 29) சுத்தம் செய்யும் பணி நடைப்பெற்றது.
விஷ வண்டு தாக்குதல் - ஒருவர் உயிரிழப்பு - அமராவதி அணை
13:24 July 29
கரூர் அருகே அமராவதி அணையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த 100 நாள் பணியாளர்களை விஷ வண்டு தாக்கியது. இதில் ஒருவர் உயிரிழந்தார்.
இதில் ஈடுபட்டிருந்த 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை, எதிர்பாராத விதமாக விஷ வண்டு தாக்கியது. 70 பேர் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், இளைஞர்கள் அங்கிருந்து தலைதெறிக்க ஓடினர். வயது முதிர்ந்தவர்கள் விஷ வண்டு தாக்குதலுக்கு ஆளாகினர்.
அவர்களை அவசர ஊர்தி மூலம் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த கார்த்தி (46), உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் உயிரிழந்த கார்த்தி மாற்றுத்திறனாளி என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ஒருவர் கவலைக்கிடமாக இருப்பதால் மருத்துவமனை வளாகத்தில் பதற்றம் நீடிக்கிறது.