தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கன்னியாகுமரியில் பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் அதிகம் - மாநில தரவரிசையில் பின்னடைவு!

கன்னியாகுமரி: மாவட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் 95.06 சதவீதம் மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

12 வகுப்பு பொது தேர்வு முடிவுகள்
12 வகுப்பு பொது தேர்வு முடிவுகள்

By

Published : Jul 16, 2020, 7:51 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில், நாகர்கோவில், தக்கலை, திருவட்டாறு, குழித்துறை ஆகிய நான்கு கல்வி வட்டங்களில் இருந்து, மொத்தம் 21 ஆயிரத்து 989 மாணவ, மாணவியர் பொதுத் தேர்வை எழுதியிருந்தனர்.
இந்தத் தேர்வு முடிவுகள் இன்று (ஜூலை.16) வெளியானது. இதில், 9 ஆயிரத்து 225 மாணவர்கள், 11,659 மாணவிகள் என, மொத்தம் 20 ஆயிரத்து 884 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது, 95.06 சதவீதம் தேர்ச்சியாகும்.

தேர்வில் மாணவியர் 98 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளிகளில் தேர்வு எழுதியவர்களில் 91.76 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில், கடந்தாண்டு தேர்ச்சி விகிதம் 94.61 சதவீதமாக இருந்தது.

இந்தாண்டு, புள்ளி 45 சதவீதம் குறைந்து 95.06 சதவீதமாக உள்ளது. அதே நேரம், தமிழ்நாடு ஆளவில் தேர்ச்சி விகித தர வரிசையில் கடந்தாண்டு 6 ஆவது இடத்தில் இருந்த கன்னியாகுமரி மாவட்டம், இந்தாண்டு ஒன்பதாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details