காமெடி நடிகர் யோகி பாபு நடித்துள்ள ”மண்டேலா” திரைப்படத்தில் முடிதிருத்துவோரை இழிவுபடுத்தும் சர்ச்சைக்குரிய காட்சிகள் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.
இதனையடுத்து திரைப்பட தயாரிப்பாளர் சக்கரவர்த்தி ராமச்சந்திரன், இயக்குனர் அஸ்வின் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து, திரைப்படத்துக்கு தடை விதிக்க முடி திருத்துவோர் சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டது. இது தொடர்பான புகார் மனுவை முடி திருத்துவோர் சங்கத் தலைவர் சீனிவாசன், கரூர் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரேவிடம் அளித்தார்.