தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரூர் மருத்துவக் கல்லூரியில் பாராமெடிக்கல் படிப்பிற்கு அனுமதி! - Karur Medical College

சென்னை: கரூர் மருத்துவக் கல்லூரியில் 2020-21ஆம் கல்வி ஆண்டு முதல் மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி வழங்கி மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

medical
medical

By

Published : Sep 10, 2020, 10:05 PM IST

கரூர் மருத்துவக் கல்லூரியில் 2020-21ஆம் கல்வி ஆண்டு முதல் பாராமெடிக்கல் படிப்பில் 130 இடங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கு அனுமதி வழங்கி, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அரசாணையில், " கரூர் மருத்துவக் கல்லூரியில் பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகளில் 2020- 21ஆம் ஆண்டு முதல் மாணவர்கள் சேர்ப்பதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

ஆய்வக பரிசோதனை தொழில்நுட்பம் இரண்டு ஆண்டுகள் பட்டயப் படிப்பில் 50 மாணவர்கள் சேருவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அதேபோல், ஓராண்டு சான்றிதழ் படிப்பில் தலா 20 இடங்களில் டயாலிசிஸ் தொழில்நுட்பம், அனஸ்தீசியா தொழில்நுட்பம், ஆப்ரேஷன் தியேட்டர் தொழில்நுட்பம், அவசர எமர்ஜென்சி கேர் டெக்னீசியன் ஆகிய படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கும் அனுமதி வழங்கப்படுகிறது" இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:கரோனா சிகிச்சையில் பெரும் பங்கு வகிக்கும் சித்த மருத்துவம்!

ABOUT THE AUTHOR

...view details