தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெரியார் மண்ணில் பெரியாருக்கு நேர்ந்த சோகம்...! - மக்களவை தேர்தல்

கரூர்: தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகும் பெரியாரின் சிலை மூடப்பட்டிருப்பது அநீதி என பொது மக்கள் குற்றாஞ்சாட்டியுள்ளனர்.

periyar

By

Published : Jun 18, 2019, 11:42 PM IST

கரூர் அடுத்த மண்மங்கலம் வட்டம், மண்மங்கலம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே உள்ள சமத்துவபுரத்தில் தந்தை பெரியார் சிலை உள்ளது. இந்த சிலையானது மக்களவை தேர்தல், அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் கரணமாக தேர்தல் நடத்தை விதிகளின்படி மூடப்பட்டது.

இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகும் சிலை மூடப்பட்டுள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,

பெரியார் மண்ணில் பெரியாருக்கு நேர்ந்த சோகம்

தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகும் பெரியாரின் சிலை நீண்ட நாட்களாக மூடி மறைக்கப்பட்டுள்ளது.

இது பெரியார் மண், பெரியார் பூமி, இங்கு பெரியார் சிலையை மூடி வைத்திருப்பது அவருக்கு இழைக்கப்பட்ட அநீதியாக கருதுகிறோம். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக மூடி வைக்கப்பட்ட பெரியார் சிலையை திறந்து வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details