தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 15, 2021, 10:59 PM IST

ETV Bharat / state

கரூரில் சுடுகாட்டில் குடியேறி மக்கள் போராட்டம்!

பட்டியலின மக்கள் சுடுகாட்டுக்குப் பாதை அமைத்துத்தர பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் கோபமடைந்த மக்கள், சுடுகாட்டில் குடியேறி போராடியது பரபரப்பை ஏற்படுத்தியது.

கரூரில் சுடுகாட்டில் குடியேறி மக்கள் போராட்டம்!
கரூரில் சுடுகாட்டில் குடியேறி மக்கள் போராட்டம்!

கரூர்: கரூர் அருகே வேடிச்சிபாளையத்தில் பட்டியலின மக்களுக்கு சொந்தமாக சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாட்டுக்குச் செல்ல பாதை அமைத்து தரக்கோரி, பட்டியலின மக்கள் பலமுறை அலுவலர்களுக்கு மனு கொடுத்துள்ளனர்.

இருப்பினும் பாதை அமைத்துத் தருவது தொடர்பாக, அரசு அலுவலர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

சுடுகாட்டில் குடியேறி போராட்டம்

இதனால் கோபமடைந்த மக்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகர்கள் ஜெயராமன், ராமச்சந்திரன் ஆகியோர் தலைமையில், இன்று (ஆக.15) சுடுகாட்டில் குடியேறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மண்மங்கலம் தாசில்தார் செந்தில்குமார், காவல் துறையினர் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருப்பினும் கலைந்து செல்ல மறுத்த பொதுமக்கள், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

இதையும் படிங்க:கோவையில் சமாதானப்புறாக்களை பறக்கவிட்ட மாவட்ட ஆட்சியர்

ABOUT THE AUTHOR

...view details