தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுடுகாட்டு பாதை கோரி சடலத்துடன் போராட்டம்! - சுடுகாட்டிற்குப் பாதை கேட்டு போராட்டம் நடத்திய மக்கள்

கரூர்: கவரப்பட்டியில் சுடுகாட்டிற்குப் பாதை அமைக்கக்கோரி சடலத்துடன் 10மணி நேர போராட்டத்திற்குப் பிறகு உடல் அடக்கம் செய்யப்பட்டது.

சுடுகாட்டிற்குப் பாதை கேட்டு போரட்டம் நடத்திய மக்கள்

By

Published : Nov 19, 2019, 6:56 PM IST

கரூர் மாவட்டம் கவரப்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி சந்திரசேகர். இவர் உடல் நலம்குன்றி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.

கவரபட்டியில், சுடுகாட்டிற்குச் செல்லும் பாதை அருகே இறந்தவரின் வீடு உள்ளதால், நேற்றிரவு 12மணிக்கு கொண்டுவரப்பட்ட சந்திரசேகரின் உடலை வீட்டிற்கு கொண்டு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சந்திரசேகரின் உறவினர்கள் நேற்று இரவு 12 மணியிலிருந்து இன்று காலை 10 மணி வரை ஆம்புலன்சை விட்டு உடலை இறக்காமல் சுமார் 10 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கவரபட்டியில் சுடுகாட்டிற்குச் செல்லும் வழியில் சில வீடுகள் இருப்பதால், சுடுகாட்டிற்கு செல்வதற்கும் இந்தப் பாதையை பயன்படுத்தக் கூடாது என அப்பகுதியினர் கூறிவருகின்றனர். இதனால், பொதுமக்கள் சுடுகாட்டிற்குச் செல்வதற்கு பாதையின்றி தவித்து வந்துள்ளனர். இது குறித்து பல முறை அலுவலர்களிடம் புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சுடுகாட்டிற்குப் பாதை கேட்டு போரட்டம் நடத்திய மக்கள்

போராட்டம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கரூர் மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் பாண்டியராஜன், குளித்தலை கோட்டாட்சியர் உள்ளிட்ட அலுவலகர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து, ஆற்றுப்புறம்போக்கு நிலத்தில் சுடுகாட்டுக்குச் செல்ல தற்காலிக பாதை அமைத்து கொடுக்கப்பட்டது. அதன்பிறகு உயிரிழந்த சந்திரசேகரன் உடலை எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர்.

இதையும் படிங்க : தனிநபர் அடாவடி: மயானத்திற்கு பாதை கேட்டு சாலை மறியல்

ABOUT THE AUTHOR

...view details