தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரூரில் அதிசய வாழைமரத்தைக் காண அலைமோதிய மக்கள் - கரூர் அண்மைச் செய்திகள்

மணவாசி சுங்கச்சாவாடி அருகே உள்ள ஐயப்பன் கோயிலில் இரண்டு அடி உயரத்திலேயே, பூ பூத்த வாழை மரத்தைக் காண மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

அதிசய வாழை மர
அதிசய வாழை மரm

By

Published : Jun 21, 2021, 11:57 AM IST

கரூர் : மணவாசி சுங்கச்சாவாடி அருகே புகழ்பெற்ற ஐயப்பன் திருக்கோயில் உள்ளது. இங்கு கோயில் வளாகத்தைச் சுற்றி மரங்கள் வளர்க்கப்பட்டுவருகின்றன. இந்நிலையில் அங்கு நடப்பட்ட வாழை, இரண்டு அடி உயரத்திலேயே பூ பூத்து பலரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியுள்ளது.

இது குறித்து கோயில் அர்ச்சகர் குருசாமி செல்வம் பேசுகையில், “கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு ஐயப்பன் சன்னதி அமைக்கப்பட்டது. கோயில் வளாகத்தில் தென்னை, கொய்யா, பலாமரம், மாமரம் உள்ளிட்ட 15 வகையான மரங்கள் வளர்க்கப்பட்டுவருகின்றன.

இது தவிர மஞ்சள், அரளி, மல்லிகை, செம்பருத்தி உள்ளிட்ட பூவகைகளும் வளர்க்கப்பட்டுவருகின்றன.

இந்த வளாகத்தில் சுமார் 15-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் உள்ளன. வாழைமரம் குறைந்தபட்சம் 10 அடி வளர்ந்த பிறகே பூ பூக்கும். ஆனால், எங்கள் கோயில் தோட்டத்தில் நடப்பட்ட வாழை மரம், இரண்டு அடி வளர்ந்த நிலையிலேயே பூ பூத்திருப்பது அதிசயம்” என்றார்.

இத்தகைய அதிசய வாழை மரத்தைக் காண, ஐயப்பன் கோயிலுக்கு மக்கள் அலைமோதத் தொடங்கியுள்ளனர்.

இதையும் படிங்க: காய்கறி வியாபாரியை காலால் உதைக்கும் காவல் ஆய்வாளர்: அதிர்ச்சி வீடியோ!

ABOUT THE AUTHOR

...view details