தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மூன்றாண்டில் மூன்று கட்சி மாறிய செந்தில் பாலாஜிக்கு மக்கள் ஆதரவு இல்லை' - ஜி.கே.மணி - செந்தில்பாலாஜி

கரூர்: "மூன்று ஆண்டுகளில் மூன்று கட்சிகளுக்கு தாவிய அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜியை மக்கள் ஆதரிக்க மாட்டார்கள்" என்று பாமக மாநில தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

gkmani

By

Published : May 5, 2019, 5:55 AM IST

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக மாநில தலைவர் ஜி.கே.மணி, தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிமுகவின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் ஜி.கே.மணி கூறுகையில்,

"தமிழ்நாடு முதலமைச்சர் நதிநீர் இணைப்பு மேலாண்மை குறித்து தொடர்ந்து அறிவித்து வருகிறார். அந்தத் திட்டத்தில் கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேறினால் தமிழகம் வறுமை இல்லாத மாநிலமாக மாறும். இதனால் 120 டிஎம்சி தண்ணீர் பெற்று தமிழக மக்களுக்கு பயன் அடைவார்கள். பாலாறு வைகை தாமிரபரணி என அனைத்து நதிகளும் இணைக்கப்படும். இதுபோன்ற நல்ல திட்டத்தை பாமக வரவேற்கிறது.

ஜி.கே.மணி பேட்டி

திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி பணம் கொடுத்து தொகுதி மக்களை வெளியூருக்கு அனுப்பி வரும் செயல் அதிர்ச்சியளிக்கிறது. மூன்று வருடத்தில் மூன்று கட்சிகளுக்கு மாறிய செந்தில் பாலாஜியை மக்கள் ஆதரிக்க மாட்டார்கள்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details