தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு மருத்துவமனையின் 3ஆவது மாடியிலிருந்து தவறிவிழுந்த நோயாளி உயிரிழப்பு!

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளி ஒருவர் மூன்றாவது மாடியில் இருந்து தவறிவிழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசு மருத்துவமனையின் 3ஆவது மாடியிலிருந்து தவறிவிழுந்த நோயாளி உயிரிழப்பு!
அரசு மருத்துவமனையின் 3ஆவது மாடியிலிருந்து தவறிவிழுந்த நோயாளி உயிரிழப்பு!

By

Published : Mar 1, 2021, 7:36 AM IST

கரூர்: காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நீலிமேடு பகுதியை சேர்ந்த சரவணகுமார் என்கிற சின்ன ஐஸ்சான் (42) என்பவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு வயிற்றுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தார்.

முன்னாள் ரவுடியான சரவணகுமார், வெங்கமேட்டில் பார் ஒன்றை நடத்திவந்துள்ளார். அத்துடன், மதுபோதை பழக்கத்திற்கு அடிமையானவராக அவர் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று புறநோளிகள் சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனை வளாகத்தின் 3ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமுற்று, சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாக தெரிகிறது.

இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் அளிக்காமல் மருத்துவக்கல்லூரி ஊழியர்கள் அவரது உடலை உடனடியாக அவ்விடத்தில் இருந்து அகற்றி, உடற்கூராய்வு சோதனைக்கு எடுத்து சென்றுள்ளனர்.

அரசு மருத்துவமனையின் 3ஆவது மாடியிலிருந்து தவறிவிழுந்த நோயாளி உயிரிழப்பு!

மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவக் கல்லூரி காவலர்கள் என 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் இயங்கக்கூடிய அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவர் மாடியில் இருந்து தவறி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் ஏழு மாடி கட்டடத்தில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் நிர்வாகம், மேற்கொள்ளாததே நோயாளி தவறிவிழுந்து உயிரிழந்ததற்கான காரணமாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க :'அதிமுக கூட்டணி மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும்'

ABOUT THE AUTHOR

...view details