தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பயிற்சி முகாமை தொடங்கி வைத்த ஊராட்சி மன்றத் தலைவர் - கரூர் செய்தி

கரூர்: எலவனூர் ஊராட்சியில் மாணவ மாணவியர்களுக்கு புதிதாக பயிற்சி முகாமை ஊராட்சி மன்றத் தலைவர் தொடங்கிவைத்தார்.

President
President

By

Published : Aug 25, 2020, 6:29 PM IST

கரூர் மாவட்டம், சின்ன தாராபுரம் காவல் சரகத்திற்குட்பட்ட எலவனூர் ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் இந்துமதி பாலசுப்பிரமணி தலைமையில் மாணவ-மாணவியர் கற்பதற்கும், திறனை மேம்படுத்துவதற்கும் புதிதாக எலவனூர் அகாடமி என்ற பயிற்சி முகாம் தொடங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், சின்னதாராபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுதர்சனம் கலந்துகொண்டார். முகாமினை தொடங்கிவைத்த அவர், இளைஞர்களின் தனித்திறமைகளை வெளிக்கொணரும் வகையிலான ஆலோசனைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஊர் பொதுமக்கள், ஊராட்சி மன்றத் தலைவருக்கு நன்றி தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details