கரூர் மாவட்டம் பிச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிங்கப்பூர் வாழ் தமிழரான கணிப்பொறி பொறியாளர் ராமச்சந்திரன் ரங்கசாமி, அவர்களது நண்பர்கள் இணைந்து கரூர் மாவட்டத்தில் உள்ள கிராமப்புற சுகாதார நிலையங்களுக்கு கரோனா சிகிச்சையளிக்க அவசர தேவைக்கு ஆக்சிசன் வசதிகள் இல்லை என்பதை அறிந்தனர்.
ரூ. 5.40 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்கள் - karur district news
கரூர்: கரூர் மாவட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ரூ. 5.40 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்களை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலமாக சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் வழங்கினர்.
![ரூ. 5.40 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்கள் வெளிநாடுவாழ் தமிழர்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-02:52:48:1623316968-tn-krr-03-oxgyen-consontracter-denotion-sungapore-tamailans-via-karur-legal-aid-news-pic-scr-tn10050-10062021121517-1006f-1623307517-761.jpg)
வெளிநாடுவாழ் தமிழர்கள்
இந்நிலையில்,ரூ. 5.40 லட்சம் மதிப்பில் 5 ஆக்சிஜன் செறிவூட்டிகளை கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும் மாவட்ட நீதிபதியுமான கிறிஸ்டோபர் மூலமாக வழங்கியுள்ளனர்.
கரூர் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர் ராஜலிங்கம் மற்றும் கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும் சார்பு நீதிபதியுமான மோகன்ராமிடம் ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டது.