தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 13ஆம் தேதி டெல்டா மாவட்டங்களின் பாசன வசதிக்காக மேட்டூர் அணையிலிருந்து 10 ஆயிரம் கனஅடி தண்ணீரை திறந்துவைத்தார்.
மாயனூர் கதவணையிலிருந்து தண்ணீர் திறப்பு! - அமைச்சர் விஜயபாஸ்கர் தண்ணீரை திறந்து வைத்தார்
கரூர்: மாயனூர் கதவணையிலிருந்து அமைச்சர் விஜயபாஸ்கர் தென்கரை வாய்க்காலுக்கும் கட்டளை மேட்டு வாய்க்காலுக்கும் தண்ணீரை திறந்துவைத்தார்.
அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
இந்த தண்ணீரானது கரூர் மாவட்டம் மாயனூர் கதவணைக்கு தற்போது வந்தடைந்த நிலையில் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தண்ணீரை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "சுமார் 27 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெரும் வகையில் மேட்டூரில் இருந்து திறந்துவிடப்பட்ட நீர் மாயனூர் கதவணைக்கு 9 ஆயிரத்து 500 கன அடி வீதம் வந்து கொண்டிருப்பதால் நீரின் அளவு படிப்படியாக உயர்த்தப்படும்." என்றார்.