கரூர்: நாகர்கோவில் முதல் மும்பை வரை செல்லும் வண்டி எண் 16340 ரயில் பெட்டியில் மதுரையிலிருந்து எஸ்.7 பெட்டியில், பொங்கல் விடுமுறை முடிந்து மேட்டூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்ற குமரன் என்பவர் மனைவி, குழந்தையுடன் ரயிலில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, 1 வயது குழந்தைக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு அடிக்கடி வாந்தி ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் ரயில் நிலையத்தைக் கடந்த போது ஏற்பட்ட இந்த திடீர் உடல் நலக்குறைவால், பெற்றோர் ரயில் பெட்டிக்குள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் பயணி குமார், ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு அளித்த தகவல் அடிப்படையில், கரூர் ரயில் நிலையத்தில் மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டனர்.