தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிவப்பு, க்ரே, வெள்ளை.. அடுத்தடுத்து மோதிய கார்களால் ஒருவர் உயிரிழப்பு.. - One person was killed at Kulithalai accident

கரூர்: குளித்தலை அருகே அடுத்தடுத்து மூன்று கார்கள் மோதி விபத்துக்குள்ளனாதில் ஒருவர் உயரிழந்தார். மூன்று பேர் படுகாயமடைந்தனர்.

சிவப்பு, க்ரே, வெள்ளை என அடுத்தடுத்து 3 கார்கள் மோதி விபத்து.. ஒருவர் உயிரிழப்பு..
சிவப்பு, க்ரே, வெள்ளை என அடுத்தடுத்து 3 கார்கள் மோதி விபத்து.. ஒருவர் உயிரிழப்பு..

By

Published : May 23, 2021, 9:23 PM IST

திருச்சி மாவட்டம் பாலக்கரை எடத்தெரு பகுதியைச் சேர்ந்தவர்கள் குமரவேல் (50), பாக்கியம் (48) தம்பதி. இவர்களது மகன் பிரசாந்திற்கும் (21) உறவுக்கார பெண்ணான நிர்மலாவிற்கும் கடந்த சில நாள்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் கோவை, பீளமேடு பகுதியில் உள்ள தாயாரின் வீட்டிற்கு நிர்மலா தனது குடும்பத்தினருடன் விருந்திற்காக சென்று பின்னர் அங்கிருந்து திருச்சிக்கு புறப்பட்டுள்ளார். சிவப்பு கலர் கேவிட் காரில் நான்கு பேரும் கரூர் அருகே சென்று கொண்டிருந்த போது கரூர் நோக்கி எதிரே வந்த கிரே கலர் காரும் திருவாரூரிலிருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்த வெள்ளை கலர் காரும் எதிர்பாராதவிதமாக அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.

சிவப்பு, க்ரே, வெள்ளை என அடுத்தடுத்து 3 கார்கள் மோதி விபத்து.

இந்த விபத்தில் நிர்மலா குடும்பத்தினரை படுகாயமைடந்தவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு குளித்தலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே குமரவேல் (50) உயிரிழந்தார். மற்ற மூவரும் தற்போது திருச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதுகுறித்து குளித்தலை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details