தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

20 திருக்குறள் ஒப்புவித்தால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம்!

கரூர்: இருபது திருக்குறளை ஒப்புவித்தால் வாகனத்திற்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என அதன் உரிமையாளர் அறிவித்துள்ளது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

பெட்ரோல்
பெட்ரோல்

By

Published : Feb 13, 2021, 7:27 AM IST

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டத்திற்கு உட்பட்ட மலைக்கோவிலூர் பகுதியில் தனியார் பெட்ரோல் நிரப்பும் நிலையத்தில், ஜனவரி 15 திருவள்ளுவர் தினத்தில் இருந்து ஏப்ரல் 31ஆம் தேதி வரை 20 திருக்குறள் கூறும் மாணவர்களின் பெற்றோர் வாகனத்திற்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த செய்தி காட்டுத்தீ போல் பரவியதால் கரூர் மாவட்டத்தில் உள்ள மாணவர்கள், தமிழ் மீதும், திருக்குறள் மீதும் பற்று உள்ளவர்கள் 20 திருக்குறளை ஒப்புவித்து ஒரு லிட்டர் பெட்ரோலை இலவசமாக பெற்றுக் கொண்டு செல்கின்றனர்.

திருக்குறள் ஒப்புவித்தால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம்

இதுகுறித்து பெட்ரோல் நிரப்பும் நிலையத்தின் உரிமையாளர் செங்குட்டுவன் கூறியதாவது, தமிழ்நாடு மாணவர்களுக்கு தொடர்ந்து தமிழ்மொழி மீதான ஆர்வத்தை வளர்பதற்காகவும் குறைவாக உள்ள வாசிப்பு திறனை ஊக்குவிப்பதற்காகவும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டம் வியாபார நோக்கம், விளம்பர நோக்கத்திற்காக தொடங்கவில்லை. பள்ளி மாணவர்கள் திருக்குறளை கற்று தங்களை சிறந்த மாணக்கர்களாக உருவாக்க ஒரு ஊக்கவிப்பு திட்டமாகும். இதன் மூலம் கரூர் மாவட்டத்தில், 25 நாட்களில் 147 மாணவர்கள் திருக்குறளை ஒப்பித்து பெற்றோருடன் வந்து ஒரு லிட்டர் பெட்ரோல் பெற்றுச் சென்றனர்.

பத்து திருக்குறள் சொல்லும் மாணவர்களுக்கு அரை லிட்டர் பெட்ரோல் வழங்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

பெட்ரோல் நிரப்பும் உரிமையாளரின் இச்செயல் கரூர் மாவட்டத்தில் உள்ள தமிழ் ஆர்வலர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details