கரூர் மாவட்டம் வீரக்குமாரன்பட்டி பகுதியை சேர்ந்த தங்கவேல் மகன் மணிகண்டன் (18). இவர் வேங்காம்பட்டி ஸ்ரீ மங்களத்து மாரியம்மன் கோயில் அருகில் கர்நாடகா மாநில மதுபானத்தை விற்பனை செய்துள்ளார்.
இது தொடர்பாக தகவலறிந்த காவல் துணை கண்காணிப்பாளர் சத்யராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார், மதுபானம் விற்பனை செய்த மணிகண்டனை கையும் களவுமாக பிடித்தனர். தொடர்ந்து, அவரிடமிருந்து 67 மதுபாட்டில்களையும் கைப்பற்றினர்.