கரூர்: மண்மங்கலம் அருகே வேடிச்சிபாளையம் நடுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர், அழகேசன் (44). இவர் நேற்று (ஜூன்.22) இரவு 8 மணியளவில் வேடிச்சிபாளையம் தாளந்துறை வாய்க்கால் பாலம் அருகில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த லாரி, அழகேசனின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அழகேசன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த, வாங்கல் காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி, உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.