தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடுக்குமாடிக் குடியிருப்பு: முதலமைச்சர் திறந்துவைப்பு - கரூர் நகராட்சி சணப்பிரட்டி பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்பு

கரூர்: சணப்பிரட்டி பகுதிகளில் அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி கலந்தாய்வு மூலம் திறந்துவைத்தார்.

தமிழக முதலமைச்சர் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் காணொளி மூலம் சென்னையில் இருந்தவாறு திறந்து வைத்தார்
தமிழக முதலமைச்சர் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் காணொளி மூலம் சென்னையில் இருந்தவாறு திறந்து வைத்தார்

By

Published : Feb 19, 2020, 10:11 PM IST

கரூர் மாவட்டம் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் திருப்பூர் கோட்டம் சார்பில் கரூர் நகராட்சி சணப்பிரட்டி பகுதிகளில் ஒரு கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 192 அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகளை இன்று தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி கலந்தாய்வு மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.

இந்த நிகழ்ச்சியை கரூரில் அம்மாவட்ட ஆட்சியர் அன்பழகன் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இந்த அடுக்குமாடிக் குடியிருப்பு படுக்கையறை, சமையலறை, கழிப்பறை, குளியலறை கொண்டதாகக் கட்டப்பட்டுள்ளது.

இது தண்ணீர், மின்சாரம், சாலை, தெருவிளக்கு, குப்பைத் தொட்டிகள்,பூங்கா உட்பட அனைத்து அடிப்படை வசதிகளும் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு பகுதியாகும். இத்திட்டம் கரூர் நகராட்சி பகுதியில் வசிக்கும் வீடற்ற நகர்ப்புற ஏழை மக்கள், சாலை புறம்போக்கு பகுதியை ஆக்கிரமிப்பு செய்திருந்த குடிசை வாசிகள் தேர்வு செய்யப்பட்டு, உரிய பங்களிப்பு தொகை வசூலிக்கப்பட்டு வீடுகள் வழங்கப்பட உள்ளன.

இத்திட்டமானது ஏப்ரல் 6ஆம் தேதி 2018 அன்று தொடங்கப்பட்டது. கட்டுமான பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு பங்களிப்பு தொகை ஒரு லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் செலுத்தி பயனாளிகளுக்கு ஒப்படைக்க தயாரான நிலையில் உள்ளது.

அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் அடுக்குமாடிக் குடியிருப்பு திறந்துவைப்பு


வெள்ளம் பாதித்த 121 குடும்பங்களுக்கு வீடுகள் - ராமோஜி குழுமம் உதவிக்கரம்
இதையும் படிங்க:

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details