கரூர் மாவட்டம் புத்தாம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி (60). இவர் அப்பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் ஆடு, மாடுகளை மேய்க்கும் பணிகளை செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு கரூர் மாவட்டம் முழுவதும் இடியுடன் கூடிய மழை பெய்தது.
இடி விழுந்து முதியவர் உயிரிழப்பு; கரூரில் சோகம் - கரூர் மாவட்ட செய்திகள்
கரூர்: புத்தாம்பூர் பகுதியில் நேற்றிரவு பெய்த மழை காரணமாக, இடிவிழுந்ததில் முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Old man dies after thunder crashes near Karur
அப்போது, ராமசாமி மீது இடி விழுந்ததில், அவருடைய காது மற்றும் வாய் பகுதிகளில் இருந்து ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தெரிந்தவுடன், கரூர் அரசு மருத்துவமனைக்குஅப்பகுதி மக்கள் ராமசாமியை அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, முதியவரின் உடல் அங்கேயே உடற்கூறாய்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, காவல் துறையினர், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.