தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட முதியவருக்கு 3 ஆண்டுகள் சிறை! - karur district news

கரூர்: சின்ன கவுண்டனூர் கிராமத்தில் வயதான முதியவர் ஒருவர், பெண்ணிடம் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட காரணத்தினால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து கரூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

old man
மூதியவர்

By

Published : Dec 19, 2019, 11:06 AM IST

கரூர் மாவட்டம் சின்ன கவுண்டனூர் கிராமத்தில் வசித்து வரும் இளம்பெண்ணிடம், அப்பகுதியைச் சேர்ந்த கிட்டான் (62) , கடந்த ஏப்ரல் மாதம் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர்கள், மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து முதியவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த வழக்கு நேற்று கரூர் மகிளா நீதிமன்றில் நீதிபதி சசிகலா முன்பு விசாரணைக்கு வந்தது. அதில், குற்றவாளியான முதியவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 1000 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.

இந்த வழக்கை சம்பந்தப்பட்ட காவல் துறை அலுவலர்கள் திறம்பட செயல்பட்டு, விரைவில் வழக்கையும் சாட்சியும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தீர்த்து வைத்ததால், அவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு தெரிவித்தார்.

இதையும் படிங்க: பணத்திற்காக குழந்தையை விற்றுவிட்டு விசாரணைக்கு வர மறுத்த தம்பதி: போலீஸ் வலைவீச்சு!

ABOUT THE AUTHOR

...view details