தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

லஞ்ச ஒழிப்புக் காவலர்கள் கைது செய்த அலுவலர் உயிரிழப்பு! - கரூர் மாவட்ட செய்திகள்

கரூர்: லஞ்ச ஒழிப்புக் காவலர்களால் கைது செய்யப்பட்ட அலுவலர் திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லஞ்ச ஒழிப்புக் காவலர்கள் கைது செய்த அலுவலர் உயிரிழப்பு!
லஞ்ச ஒழிப்புக் காவலர்கள் கைது செய்த அலுவலர் உயிரிழப்பு!

By

Published : Mar 19, 2020, 3:12 PM IST

கரூர் மாவட்டம் பரமத்தியை அடுத்த பவித்திரத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு சொந்தமான வீட்டுமனைக்கு ஊராட்சியின் அனுமதி வேண்டி க.பரமத்தி ஒன்றிய அலுவலகத்தை நாடியுள்ளார். அப்போது வீட்டுமனை அப்ரூவல் கொடுக்க கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயந்தி ராணி 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

லஞ்சம் கொடுக்க மனம் இல்லாத ரமேஷ், கரூர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறை துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையிலான போலீசார், பரமத்தி ஒன்றிய அலுவலகத்திற்கு சென்று ரமேஷை லஞ்ச பணம் கொடுக்க வைத்தனர். அப்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் ஜெயந்தி ராணியை சுற்றி வளைத்து கைது செய்து விசாரணை நடத்தினர்.

நேற்று இரவு 11 மணிக்கு மேல் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஜெயந்தி ராணியை அழைத்துக் கொண்டு மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி மலர்விழி வீட்டில் காத்திருந்தனர். அப்போது ஜெயந்தி ராணிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் உடற்கூறாய்வுக்காக மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கரூர் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

லஞ்ச ஒழிப்புக் காவலர்கள் கைது செய்த அலுவலர் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details