தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு : சாமிக்கு மனு வைத்து ஆர்ப்பாட்டம் - கரூர் மாவட்ட செய்திகள்

கரூர் : தாந்தோணி மலை பகுதியில் உள்ள புகழ்பெற்ற கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பு செய்ததாகக் கூறி, சாமிக்கு மனு வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Occupancy of temple lands in Karur
Occupancy of temple lands in Karur

By

Published : Aug 8, 2020, 5:23 PM IST

கரூர் மாவட்டம் தாந்தோணி மலை பகுதியில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலுக்குச் சொந்தமான கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து கட்டிடம் கட்டுவதாக புகார் எழுந்துள்ளது. இதையறிந்த இந்து மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் வெங்கடரமண சாமிக்கு மனு வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், கோயில் நிலங்களை தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கோவில் முன்பு 10க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட அனைவர் மீதும் தாந்தோணிமலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details