தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரூரில் வெறிச்சோடிய அரசு மதுபானக் கடை

கரூர்: தமிழ்நாட்டில் இன்று டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ள நிலையில், கரூர் மாவட்டத்தில் அரசு மதுபானக் கடைகள் வெறிச்சோடி காட்சியளிக்கின்றன.

கரூரில் வெறிச்சோடிய அரசு மதுபான கடை
கரூரில் வெறிச்சோடிய அரசு மதுபான கடை

By

Published : May 16, 2020, 3:01 PM IST

தமிழ்நாட்டில் கடந்த 7ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இதையடுத்து, கடைகளில் கரோனா பாதுகாப்பு நிபந்தனைகளை அரசு மீறியதாகக் கூறி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அனைத்து மதுபானக் கடைகளையும் திறக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

அதன்படி, தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களிலும் இன்று மதுபானக் கடைகள் திறக்கப்பட்டு மதுபானங்கள் விற்பனையாகிவருகின்றன. அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. மாவட்ட பேருந்து நிலையம் அருகே மனோகரா கார்னர் அரிஸ்டோ மதுபானக் கடை அமைந்துள்ளது. மாவட்டத்தின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் இந்தக் கடை, அதிக வருவாய் ஈட்டக்கூடிய கடையாக இருந்துவருகிறது.

கரூரில் வெறிச்சோடிய அரசு மதுபான கடை

இந்நிலையில், இன்று காலை 10 மணிக்கு கடை திறக்கப்பட்ட நிலையில், வாடிக்கையாளர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. காலை முதல் சற்றுமுன் வரை 60 டோக்கன் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது என ஊழியர்கள் தெரிவித்தனர். இதேபோல் மாவட்டத்தின் அனைத்துக் கடைகளிலும் குறைந்த வருவாய் இருப்பதாக மதுபான ஊழியர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க:'பட்டியலினத்தவரை இழிவுபடுத்திய தயாநிதியை கைது செய்க!'

ABOUT THE AUTHOR

...view details