தமிழ்நாட்டில் நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. இந்நிலையில், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதி சட்டப்பேரவை இடைத் தேர்தலில் அகிம்சா சோசலிச கட்சி சார்பில் நாமக்கலைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் போட்டியிடுகிறார். அவர் நூதன முறையில் காந்தி வேடம் அணிந்து வேட்பு மனு தாக்கல் செய்தது அனைவரையும் வியக்க வைத்தது.
காந்தி வேடத்தில் வேட்பு மனு தாக்கல் செய்த வேட்பாளர்
கரூர்: அரவக்குறிச்சி தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் அகிம்சா சோசலிச கட்சி வேட்பாளர் ரமேஷ் என்பவர் காந்தி வேடம் அணிந்து வந்து வேட்புமனு தாக்கல் செய்தார்.
காந்தி வேடத்தில் வேட்பாளர் ரமேஷ்
இதுகுறித்து பேசிய ரமேஷ் அரசியலில் அகிம்சையை பின்பற்ற வேண்டும் என்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காந்தி வேடமணிந்து வந்ததாகத் தெரிவித்தார். மேலும், அரவக்குறிச்சி உள்ளிட்ட நான்குசட்டப்பேரவைத் தொகுதியின் இடைத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் மே 19ம் தேதி நடைபெறுகிறது.