கரூர் மாவட்டம் பரமத்தி ஒன்றியத்துக்குட்பட்ட ரங்கநாதபுரம் பேருந்து நிறுத்தம் எதிரே கரூர் மாவட்ட தென்னை, வேளாண் பயிர் சாகுபடி விவசாயிகள் சங்கம் சார்பில் நீராபானம் அங்காடி தொடக்க விழா நடைபெற்றது. நிறுவனத் தலைவர் ராஜா தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
நீராபானம் தயாரிப்பு விவசாயிகளின் பொருளாதர தாகத்தை தீர்க்கும் - அமைச்சர் விஜயபாஸ்கர்
கரூர்: நீராபானம் அங்காடி தொடக்க விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர் "நீராபானம் தயாரிப்பால் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும்" என்று தெரிவித்தார்.
அமைச்சர் விஜயபாஸ்கர் சிறப்புரை ஆற்றும் போது...
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், "விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி உத்தரவின் பேரில் தமிழ்நாட்டில் தென்னை மரங்களிலிருந்து நீராபானம் இறக்குமதி செய்ய விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் வருமானம் பெறக்கூடிய வகையில் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்காத நீராபானம் பொது மக்களுக்கு விநியோகிக்கப்படுவதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது" என்றார்.