தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரூரில் புதிய காவல் கண்காணிப்பாளர் நியமனம்! - TN Election 2021

கரூர் மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக ஷஷாங்க் சாய் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

காவல் கண்காணிப்பாளர் ஷஷாங்க் சாய் ஐபிஎஸ்
காவல் கண்காணிப்பாளர் ஷஷாங்க் சாய் ஐபிஎஸ்

By

Published : Apr 2, 2021, 5:37 PM IST

கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோரை மாற்றி தலைமை தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

இதனையடுத்து கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த மகேஸ்வரன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். மேலும் மாவட்ட ஆட்சியர் மலர்விழி தேர்தல் அல்லாத பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து கரூர் மாவட்டத்தில் புதிதாக காவல் கண்காணிப்பாளர் ஷஷாங்க் சாய் ஐபிஎஸ், தான் தோன்றி மலையில் உள்ள கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காலை 10 மணியளவில் பொறுப்பேற்றுக்கொண்டார்.

கரூர் மாவட்டத்தில் அதிமுக திமுகவுக்கு இடையே தேர்தல் தகராறு அடிக்கடி நிகழ்ந்து வரும் சூழ்நிலையில் புதிதாக பொறுப்பு ஏற்றுக்கொண்ட கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு மிகுந்த சவால் மிகுந்த தேர்தல் தளமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:திமுகவைக் குற்றவாளியாக்கி அதிமுக நாயகனான கதை

ABOUT THE AUTHOR

...view details