கரூர் மாவட்டம் திருக்காம்புலியூர் பகுதியில்தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கரூர் நோக்கி வந்து கொண்டிருந்த வாகனத்தில் சுமார் 450 கிலோ வெடிமருந்துடன் 850 டெட்டனேட்டர்கள், 18 ஜெலட்டின் குச்சிகள் இருப்பது வாகன சோதனையில் தெரியவந்தது.
450 கிலோ வெடிமருந்து பொருட்களை கைப்பற்றிய தேர்தல் பறக்கும் படை
கரூர்: உரிய ஆவணங்களின்றி 450 கிலோ வெடிமருந்து பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
450 கிலோ வெடிமருந்து பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றியுள்ளனர்
இதையடுத்து ஓட்டுநரை பறக்கும்படையினர் விசாரணைக்காக கரூர் வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்திடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக கரூர் வருவாய் கோட்டாட்சியர், அப்பகுதியிலுள்ள கல்குவாரிகளுக்கு பயன்படுத்த வெடிமருந்து கொண்டு வரப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காக எடுத்து வரப்பட்டதா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.