தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாமக்கல் To கரூர் இடம் பெயர்ந்ததா சிறுத்தை? பீதியில் மக்கள் - Karur Forest Dept officials

கரூர் அருகே நொய்யல் பகுதியில் அடையாளம் தெரியாத விலங்கு கால்நடைகளை கடித்து காயப்படுத்திய நிலையில், அங்கு சிறுத்தை நடமாட்டம் இருக்கலாம் என மாவட்ட வனத்துறையினர் சிசிடிவி, கூண்டுகள் ஆகியவற்றை பொருத்தியதோடு தீவிர கண்காணிப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Feb 19, 2023, 2:14 PM IST

நாமக்கல் To கரூர் இடம் பெயர்ந்ததா சிறுத்தை புலி? பீதியில் மக்கள்

கரூர்:புகலூர் அருகே உள்ள நொய்யல், அத்திப்பாளையம் புதூர் பகுதிகளில் விவசாயி நாச்சிமுத்து என்பவரது தோட்டத்தில் இருந்த 5 ஆடுகளை அடையாளம் தெரியாத விலங்கு நேற்று முன்தினம் இரவு கடித்து காயப்படுத்தியது. விவசாயியின் தோட்டத்தில் ஆடுகளை கடித்த அடையாளம் தெரியாத விலங்கின் பற்களின் தடங்கள் மிகப்பெரிதாக இருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.

இதற்கு காரணம், கரூர் மாவட்ட எல்லையில் உள்ள நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் பகுதியில் உலாவி வரும் சிறுத்தை இன்னும் பிடிபடாததுதான். ஆற்றுப்பாதையைக் கடந்து வந்து நொய்யல் பகுதியை தாண்டி ஆடுகளை கடித்திருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. இச்சம்பவம் விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

சிறுத்தை என்பது இரவு நேரத்தில் உணவு தேடுவதற்காக 20 கிலோ மீட்டர் வரை தினந்தோறும் பயணிக்க வாய்ப்புள்ளது என ஏற்கனவே வனத்துறையினர் கூறியிருந்த நிலையில், கரூர் மாவட்ட எல்லையில் நிகழ்ந்த இந்த சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நொய்யல் பகுதியில் அடையாளம் தெரியாத விலங்கு கடித்து, ஆடுகள் பலியான சம்பவம் தொடர்பாக தகவலறிந்த கரூர் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து நேற்று வந்து தீவிர விசாரணை நடத்தி கால் தடயங்களை சேகரித்து ஆய்வுக்கு எடுத்துச்சென்றனர்.

இதனிடையே வனத்துறை ஆய்வில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்திவேலூர் பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தில் கண்டறியப்பட்ட கால் தடங்கள் பெரும் அளவு ஒற்றுமையாக உள்ளதே கண்டறிந்தனர். பின்னர் சிறுத்தை இடம் பெயர்ந்து இப்பகுதிக்கு வந்திருக்கலாம் என்பதை உறுதி செய்துகொண்டு 19 நவீன கேமராக்கள், 4 கூண்டுகள், மூன்று வளைகள் என வனத்துறை அதிவிரைவுப் படையினர் கொடைக்கானலில் இருந்து வரவழைக்கப்பட்டு, சம்பவ இடத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

கரூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு இன்று (பிப்.19) ஆய்வு மேற்கொண்டார். இதுகுறித்து கரூர் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடத்தில் கூறுகையில், 'மாலை நேரங்களில் குழந்தைகள், பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியே வருவதாக இருந்தால், இரண்டு மூன்று பேரும் சேர்ந்து வர வேண்டும். தனியாக யாரும் நடமாட வேண்டாம். குறிப்பாக, இரவு நேரத்தில் கம்பு மற்றும் கை விளக்குகளுடன் வெளியே செல்ல அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றனர்.

கிராமத்தில் விவசாயிகளிடம் மாவட்ட ஆட்சியர் விசாரணை

மேலும், இதுகுறித்து அருகிலுள்ள ஐந்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து 24 மணி நேரமும் வனத்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் சிறுத்தையை பிடிப்பதற்கான பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருவதாக' கூறினார். கரூர் மாவட்ட வன அலுவலர் சரவணன், ஓசூர் வன உயிரின கால்நடை மருத்துவர் பிரகாஷ், கரூர் வருவாய் கோட்டாட்சியர் ரூபினா, புகலூர் வட்டாட்சியர் முருகன் ஆகியோர் அப்போது உடன் இருந்தனர்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் பகுதியில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக இரவு நேரத்தில் சிறுத்தை தெரு நாய்களையும் வீட்டில் வளர்க்கும் நாய்களையும் கடித்து வந்த நிலையில், அங்கு வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தலைமையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அடையாளம் தெரியாத விலங்கின் கால் தடம்

மேலும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள பயன்படுத்தாத கல்குவாரியில் சிறுத்தை ஆறு மாதங்களாக தங்கியிருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும்; மேலும் ஒன்றுக்கும் மேற்பட்ட சிறுத்தையின் கால் தடங்களையும் கண்டறிந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள நொய்யல் அத்திப்பாளையம் கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பையும் பொதுமக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: கிராமத்திற்குள் நுழைந்து கால்நடையை வேட்டையாடும் புலி; தீவிர கண்காணிப்பில் தமிழக - கர்நாடக வனத்துறை

ABOUT THE AUTHOR

...view details