கரூர் காந்தி கிராமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த முதல்வர், மருத்துவர் பி.அசோகன் கடந்த 24ஆம் தேதி கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பணியிடை மாற்றம் செய்யப்பட்டார்.
அதைத்தொடர்ந்து கிருஷ்ணகிரி மருத்துவக்கல்லூரியில் முதல்வராகவும், கல்லூரிச் சிறப்பு அலுவலராகவும் பணியாற்றி வந்த மருத்துவர் ஆர்.முத்துச்செல்வன், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராகப் பணி இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்ட முத்துச்செல்வனுக்கு கல்லூரிப் பேராசிரியர்கள், மருத்துவர்கள்,செவிலியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
கரூர் மருத்துவக் கல்லூரி முதல்வராக முத்துச்செல்வன் பொறுப்பேற்பு - etv செய்திகள்
கரூர்: கரூர் மருத்துவக்கல்லூரி புதிய முதல்வராக முத்துச்செல்வன் இன்று பொறுப்பேற்றார்.
கரூர் மருத்துவக் கல்லூரி முதல்வராக முத்துச்செல்வன் பொறுப்பேற்பு
இதையும் படிங்க: கரோனா நிவாரண நிதி: அரசு அலுவலர்களின் ஒரு நாள் ஊதியம் ஏற்பு