தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைத்த கரூர் நகராட்சி நிர்வாகம் - municipal market shops sealed due to unpaid rents

கரூர்: நகராட்சிக்குச் சொந்தமான வாடகை செலுத்தாத கடைகளுக்கு நகராட்சி நிர்வாகம் சீல் வைத்தது.

municipal market shops sealed in karur
municipal market shops sealed in karur

By

Published : Feb 5, 2020, 9:53 AM IST

கரூர் மாவட்டம் ரயில் நிலையம் அருகில் காமராஜ் காய்கறி சந்தை உள்ளது. இந்தச் சந்தையில் நகராட்சிக்குச் சொந்தமான 70க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கிவந்தன. சில மாதங்களுக்கு முன்பு நகராட்சி வாடகை தொகையை உயர்த்தியதால், அதை எதிர்த்து 52 கடைகளைச் சேர்ந்த வியாபாரிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். தற்போது அந்த வழக்கு நிலுவையில் இருந்துவருகிறது.

இதையடுத்து வழக்கு தொடுத்த வியாபாரிகளிடம் வசூலிப்பதற்காக நகராட்சி வரிவசூல் அலுவலர் திருமால் செல்வம் தலைமையிலான குழு சந்தைக்கு வந்தது. இதைத்தொடர்ந்து சந்தையில் கடந்த 30 ஆண்டுகளாகக் கோழிக்கடை வைத்திருக்கும் முருகேசன் என்பவரின் கடையை நகராட்சி நிர்வாகம் பூட்டி சீல் வைத்தது.

வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல்

வெங்கமேடு பகுதியில் நகராட்சிக்குச் சொந்தமான மீன் கடைகள் அனைத்தும் வாடகை அளிக்க, சிறப்புத் தவணையாக சில மாதங்கள் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டுள்ளன. அதன் பின்பும் வாடகை கட்டத் தவறினால் கடைகள் சீல் வைக்கப்படும் எனவும் நகராட்சி எச்சரித்துள்ளது.

இதையும் படிங்க: 'இனி எம்பிபிஎஸ் தேர்வுகள் ஆன்லைன் மூலம் கண்காணிக்கப்படும்' - துணைவேந்தர் சுதா சேஷய்யன்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details